ADVERTISEMENT

ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பதவி நீட்டிப்பில் உடன்பாடு இல்லை -ஜி. ராமகிருஷ்ணன் 

02:47 PM Dec 24, 2018 | selvakumar

ADVERTISEMENT

கணிணி கண்காணிக்க மத்திய அரசு குழு அமைத்திருப்பது கண்டத்திற்குரியது. இது ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பதாக உள்ளது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்.

ADVERTISEMENT

திருவாரூரில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, " தமிழக அரசு மேற்கொள்ளும் புயல் நிவாரணப் பணிகள் திருப்தியில்லை. கஜா புயல் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி வருகிற 2019ம் ஆண்டு ஜனவரி 2 ம் தேதி முதல் திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடத்தப்படும். கணிணி கண்காணிக்க மத்திய அரசு குழு அமைத்திருப்பது கண்டத்திற்குரியது. இது ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பதாக உள்ளது. இந்த சட்டம் பாசிச தன்மை கொண்டது. இச்சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும்.

ஸ்டொ்லைட் ஆலை திறப்பதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக
மூட வேண்டும் என்பதே சிபிஎம் நிலைப்பாடு.

ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பதவி நீட்டிப்பில் உடன்பாடு இல்லை. அரசு துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது ஏற்புடையது அல்ல என்றார் அவர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT