ADVERTISEMENT

ரஜினியின் அரசியலுக்காக வீதியில் இறங்கிய ரஜினி மன்றத்தினர்!

07:23 PM Mar 15, 2020 | kalaimohan

ரஜினி எப்படியும் இந்த ஆண்டு அரசியலுக்கு வந்துவிடுவார், அடுத்த தேர்தலுக்கு வந்துவிடுவார் என்றே அவரது ரசிகர்கள் காத்திருந்து காலத்தை ஓட்டியுள்ளனர். இந்த காத்திருப்புக்கான பிரதான காரணம், திரையில் அதிசயத்தை நிகழ்த்தும் ரஜினி நிஜத்திலும் நிகழ்த்திவிடுவார் என்ற நம்பிக்கையில்தான். அதற்காகவே ஆண்டுகள் ஓடினாலும் இன்னும் அவர் பின் ஓடுவதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே இருந்தனர்.

இந்த நிலையில் தான் “நான் முதல்வராக வேண்டும் என நினைத்துப் பார்த்தது கூட இல்லை. திருமணம் முடிந்த பின் சமையல் வேலை செய்தவர்கள், மற்ற பணியில் ஈடுபட்டவர்களை அனுப்பிவிடுவது போல் கட்சியில் பதவிகளை கலைத்துவிடுவேன். ரஜினி ரசிகர்களுக்கு நேரடியாகவே ரஜினி பளிச் சென்று சொன்னார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


“வருங்கால முதலமைச்சர் என்று சொல்வதை நிறுத்துங்கள். தமிழ்நாடு முழுவதும் மூலை முடுக்கெல்லாம் ரசிகர்கள் மக்களை சந்திக்க வேண்டும், ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று கூறவேண்டும், அதன்மூலம் பெரிய எழுச்சி உருவாக வேண்டும், அதை நான் பார்க்க வேண்டும், அதன்பின்னர் அரசியலுக்கு வருகிறேன்” என்று கூறி ரசிகர்களை அசர வைத்துவிட்டார்.

ரஜினி அரசியலுக்கு வந்து முதல்வராக வேண்டும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கும் மறுப்பு தெரிவித்த அவர், ரசிகர்களே மக்கள் மத்தியில் சென்று எழுச்சியை உருவாக்க வேண்டும் என்கிறார். அதன் மூலம் எழுச்சி உருவானால் வருகிறேன் என்றுதான் சொல்கிறார்.


இதை வேதவாக்காக எடுத்துக்கொண்ட ரசிகர்கள் .தமிழகத்தில் முதல் முறையாக கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சேலம், கடலூர், மாவட்டத்தை சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் பிளக்ஸ் போர்டு வேன், டிஜிட்டல் திரைகள் கொண்ட நடமாடும் வேன்கள் என பல வகையான வேன்களை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் ஒரு படி மேலே சென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ரஜினி மன்றத்தை சேர்ந்த ரசிகர்கள் குழு குழுவாக தனித்தனியே பிரிந்து பேருந்து நிலையம், ரயில்நிலையம், மார்கெட் பகுதிகள், என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் ரஜினிகாந்தின் அரசியல் கொள்கை குறித்து பிரச்சாரம் வடிவில் செய்து கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் அரசியலுக்கு மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தாமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு ரஜினி ரசிகள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள் என்பதால் தற்போது அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT