rajini makkal mantram sad

Advertisment

அண்மையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தார்.அதன் பிறகும் அவரது ரசிகர்கள் சிலர், 'ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி' அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதேபோல், தொடர்ந்து அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்ற போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளது.அதில், "ரஜினியைஅரசியலில் ஈடுபடக் கூறி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபடப் போவதாகச் சிலர் பேசி வருகின்றனர். போராட்டங்களில் ஈடுபடப் போவதாக சில ரசிகர்கள் பேசிவருவது ரஜினியை நோகடிக்கும் செயல். போராட்டத்திற்காக ஒரு சிலர் நிதி வசூல் செய்ததாகவும் வெளிவரும் தகவல்கள் வருத்தமளிக்கிறது. ரஜினிகாந்த் மீது அன்பும், அக்கறையும் கொண்ட ரசிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்" இவ்வாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.