நடிகர் ரஜினிகாந்த்க்கு உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரி ரஜினி மக்கள் மன்றத்தினர் மதுரை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு கொடுத்தனர்.

Advertisment

give  Z-section security to Rajinikanth

துக்ளக் விழாவில் பெரியார் பற்றி ரஜினி கூறிய கருத்துக்கு நாடு முழுவதும் பல வித அமைப்புகள் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் செம்மொழி பூங்கா அருகில் உமாபதி தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு,ரஜினி வீட்டை முற்றுகையிட்டு கொலை மிரட்டலும் விட்டனர்.

எனவே நடிகர் ரஜினிகாந்த்க்கு இசட்பிரிவு மற்றும் உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரியும், கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மதுரை மாநகர் துணை செயலாளர் அழகர் தலைமையில் பால்பாண்டி, பழனிக்குமார் உள்ளிட்டோர் மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல்துறை ஆணையாளரிடம் மனு அளித்தனர்.