ADVERTISEMENT

உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த ஷாக்! போலீஸை குவித்து ஹெலிகாப்டரை வரவழைத்த எடப்பாடி பழனிசாமி!

09:51 AM Nov 20, 2018 | rajavel



கஜா புயல் பாதிப்பு குறித்து திங்கள்கிழமை துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

ADVERTISEMENT

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக தனி அதிகாரிகளை நியமித்து அவர்கள் அங்கு சென்றுள்ளனர். அவர்களிடம் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதிகாரிகளால் மக்களை சமாதானப்படுத்த முடியவில்லை. புயலால் மரங்கள் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன. அப்புறப்படுத்த போதிய பணியாளர்கள் இல்லை. நிவாரணப் பொருட்களும் சென்றடைய சிரமமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஆலோசனையில் பங்கேற்ற அமைச்சர்களும், எங்களையே சூழ்ந்துகொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். வேண்டுமென்றே தினகரன் ஆட்களும் உள்ளே புகுந்து எங்களுக்கு எதிராக பேசுகின்றனர். மக்களை தூண்டிவிடுகிறார்கள். நாங்கள் இனி அங்கு செல்ல வேண்டும் என்றால் எங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் செல்ல முடியும் என்று கூறியுள்ளனர்.

உளவுத்துறை அதிகாரிகளை அழைத்து, நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்டுள்ளார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர்கள், நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. பாதிப்பு அதிகம். ஆனால் உண்மையான பாதிப்புகளை முதலில் அரசே குறைத்து வெளியிட்டதால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்சாரம் அறவே துண்டிக்கப்பட்டுள்ளது. பத்து நாள் ஆனாலும் மின்சார விநியோகம் நடப்பது கடினம்தான் என கூறியுள்ளனர்.

பாதித்த பகுதிகளை உடனே பார்க்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சொல்கின்றனர். ஆகையால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு, முகாமுக்கு சென்றால் மக்கள் எந்த நேரத்தில் என்ன பேசுவார்கள் என்று தெரியாது. பிறகு உங்கள் விருப்பம் என்று தெரிவித்துள்ளனர்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர்கள், நாங்க போனபோது காரை மறித்து மறியல் செஞ்சாஞ்க, நீங்க போனா மட்டும் மறிக்க மாட்டாங்களா? மறியல் செய்து, கேள்வி மேல கேள்வி கேட்டு நகர விடாம பண்ணியதால், நம்ம ஓ.எஸ்.மணியன் காரை அப்படியே விட்டுவிட்டு, பைக் ஒன்றில்தான் அங்கிருந்து வெளியே வந்திருக்கிறார் என்று கூறியுள்ளனர்.

இவற்றையெல்லாம் கேட்ட பழனிசாமி, புதுக்கோட்டை உள்ளிட்ட சில இடங்களை தேர்வு செய்யுங்கள். போலீசாரை அங்கு நிறுத்துங்கள். நமக்கு எதிரானவர்களை நெருங்க விடவேண்டாம். பாதிக்கப்பட்ட நம்ம கட்சிக்காரங்களை மட்டும் அழைத்து நிவாரணப் பொருட்களை கொடுத்து, குறைகளை கேட்போம். ஹெலிகாப்டரில் செல்வோம். அங்கிருந்து எங்கேயாவது காரில் போகிற மாதிரி இருந்தால் மறியல் நடக்காமல் இருக்க போலீசார் குவித்து வையுங்கள் என்று உத்தரவிட்டு இன்று அதன்படி புதுக்கோட்டை சென்று பாதிப்பட்ட பகுதிகளை பார்வையிட்டிருக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT