ADVERTISEMENT

ரவுடிகளை கட்டுப்படுத்தப் வணிகர்கள் ரோந்து குழு அமைக்க வேண்டும் - கிரண்பேடி அறிவுறுத்தல்!

11:47 PM May 17, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த சாந்தமூர்த்தி என்பவர் நேற்று முன்தினம் மதுபோதையில் அப்பகுதியில் உள்ள தனியார் மளிகைக்கடை ஒன்றில் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். தகவலறிந்து வில்லியனூர் காவல்நிலைய காவலர் வந்து அவரை பிடிக்க முயற்சி செய்தபோது காவலரையும் தாக்கியுள்ளார். இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

அதனையடுத்து அங்கிருந்து தப்பிச்சென்ற சாந்தமூர்த்தி மீது பணம் கேட்டு மிரட்டுதல், காமீது தாக்குதல் தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரைதேடி வருகின்றனர். வியாபாரிகள் மத்தியில் இது போன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வணிகர்கள் வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி நேற்று வில்லியனூர் பகுதியில் கடையடைப்பு நடைபெற்றது.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, காவலரை தாக்கிய ரவுடி யார்?

காவல்துறை ஆவணங்களில் அந்த ரவுடியின் பெயர் இல்லையா? BEAT SYSTEM என்ன செய்து கொண்டிருக்கின்றது...? என சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்.

பின்னர் இன்று வெளியிட்டுள்ள கருத்தில் 'ரவுடிகளை கண்காணிக்கவும், கட்டுபடுத்தவும் வணிகர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் சொந்த முயற்சியில் ரோந்து குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். மேலும் தங்களுடைய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி அவற்றை முழு செயல்பாட்டில் வைக்க வேண்டும். அதேபோல் வணிகர்கள் ரோந்து போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும். மேலும் போலீசார் சுதந்திரமாக செயல்பட வேண்டும். மாவட்ட ஆட்சியருடன் இணைந்து சமூக விரோத கும்பலின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT