
இந்தியாவில் அதிக தினசரி கரோனா பாதிப்பு உறுதியாகும் மாநிலமாகக் கேரளா இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் அண்மைக்காலமாகத் தினசரி கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைவதும், மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டுவதுமாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த 10 ஆம் தேதி, கேரளாவில் 10,691 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. அதன்பின்னர் கடந்த 11 ஆம் தேதி அம்மாநிலத்தில் 6,996 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று (12.10.21) 7,823 கரோனா உறுதியானது.

இந்த நிலையில் இன்று மீண்டும் அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று மட்டும் அங்கு 11,079 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 123 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 9,972 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.