ADVERTISEMENT

’கோழைதான் கொல்வேன் என்பான்; தம் இருந்தா நேர்ல வா!’ - பிரகாஷ்ராஜ் ஆவேசம்

10:21 PM Jul 06, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

’மறக்க முடியுமா தூத்துக்குடியை?’ என்ற தலைப்பில் சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் கனிமொழி எம்.பி., தொல்.திருமாவளவன், தி.வேல்முருகன், இயக்குநர் வெற்றிமாறன், த.வெள்ளையன், நடிகர் பிரகாஷ்ராஜ், பேராசிரியர் அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

ADVERTISEMENT

இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியபோது, ‘’தூத்துக்குடியில் 13 பேர் கொல்லப்பட்டவர்கள் விதைக்கப்பட்டுள்ளனர். போராடும் நாம் அரசியல்வாதிகளிடம் பேசவில்லை. நாம் பேசி வருவது... நில தரகர்களுடன் பேசி வருகிறோம். இவனுங்க அரசியல்வாதிகள் அல்ல. ரியல் எஸ்டேட் காரனுங்க. தமிழ்நாட்டை கூவி கூவி விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கின்ற ஆட்சி மட்டுமல்ல. எல்லா கட்சிகளும் எல்லா ஆட்சிகளூம் ஒன்றுதான். இதில் ஒன்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

எந்த வரலாற்றிலும் தீயவனுங்க வாழ்ந்ததாக இல்லை. ஆனால், நம்முடையை வலி என்னவென்றால், இவனுங்க இருக்கிற ஐந்து , பத்து வருடங்களில் நிறைய காயங்களை ஏற்படுத்திவிட்டு போய்விடுவானுங்க. அதிலிருந்து நாம் மீண்டு வருவது சுலபமல்ல.

பயம் இல்லாமலும் , தெளிவாகவும் நாம் பேச வேண்டிய நிலை உள்ளது. சுற்றி வளைத்து பேசவேண்டிய காலகட்ட இதுவல்ல. நேரடியாக பேச வேண்டிய காலகட்டம் இது. நான் அரசியலில் தான் உள்ளேன். ஆனால் இவர்களை போல தேர்தல் அரசியலில் இல்லை.

நம் கையை எடுத்து நம் கண்ணை குத்துகின்றனர். கேள்வி கேட்பது எங்களின் உரிமையாகும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பது தான் மிக ஆபத்தானது.

நீதிபதி, போலீஸ் ஊடகம் என எல்லாம் துறையும் அரசிடம் உள்ளது. கன்னடக்காரன் ஏன் தமிழ் நாட்டில் பேசுகிறேன் என்று என்னை சமூக ஊடகத்தில் விமர்சிக்க தொடங்குவார்கள். ஆனால் நான் மனிதன் மட்டுமே. எனக்கு இதையெல்லாம் கேட்க நேரமில்லை. ஏன் என்றால் எனக்கு சூடு சொரணை இல்லை. உண்மை என்று எனக்கு தெரிந்தால் நான் உங்களுடன் நிற்பேன்.

என்னை மிரட்டி வருகிறார்கள். கோழைதான் கொல்வேன் என்பான். தம் இருந்தா நேர்ல வந்து பேசு. நான் தயார். நான் சினிமாவிலும் நாடகத்திலும் இருந்திருக்கிறேன். பத்து முகங்களில் ஒரெ குரல் கேட்டதில்லை. ஒரு சாமியார், ’காப்பர் நமக்கு ரொம்ப முக்கியம். காப்பர் சொம்புவைத்தான் நாங்க புடிச்சிக்கிட்டு இருக்கிறோம்’ என்கிறான். நடிகன் வேசத்தில் ஒருத்தர் வந்து, போலீஸ்காரங்களை நாம எப்படி பேசலாம்’ என்கிறார். இப்படி பத்து பேரும் ஒரே கருத்தை எப்படி சொல்கிறார்கள். எவ்வளவு நாளாக எங்களை முட்டாள்களாக ஆக்கிக்கொண்டே போகிறீர்கள்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT