
தூத்துக்குடி அருகே காதல் கணவன் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள வடக்குதோலப்பன் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு முத்துராணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கதிர், உதயபாலா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த வாரத்தில் கதிர் மற்றும் உதயபாலா ஆகிய இருவருக்கும் இசக்கி அம்மன் கோவிலில் வைத்து முடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு செலவு செய்வதற்காக மனைவி முத்துராணியிடம் பாண்டியன் நகைகளை கேட்டுள்ளார். ஆனால் முத்துராணி நகைகளை தர மறுத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் ஆத்திரமடைந்த பாண்டியன் துண்டை வைத்து முத்துராணியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு புகாரளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முத்துராணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிடிக்கப்பட்ட பாண்டியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)