ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை சுற்றுச்சூழலுக்கு எந்த மாசும் ஏற்படவில்லை எனக் கூறி வந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆலையை மூடிய பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக ஸ்டெர்லைட் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

thoothukudi district sterlite copper plant issues chennai high court

Advertisment

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகள், நேற்று (18.12.2019) மீண்டும் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர் மாசு ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆலையை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

thoothukudi district sterlite copper plant issues chennai high court

Advertisment

1977- ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் பாதுகாப்பு சட்டத்தின் படி மத்தியில் 17.33% ஜி.டி.பியும், மாநிலத்தில் 3.3% ஜி.டி.பி வருவாயும் ஈட்டும் நிறுவனத்தை மூட மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், மாநில அரசுக்கு அந்த அதிகாரமும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டு மே மாதம் 23- ஆம் தேதி தற்காலிகமாக ஆலையை மூட மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்ட நிலையில், உரிய ஆதாரங்கள் இல்லாமல் மே 28- ஆம் தேதி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஆலையை நிரந்தரமாக மாநில அரசு மூடியதாக வாதிட்ட ஆரியமா சுந்தரம், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் வரை ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு எந்த மாசும் இல்லை என தெரிவித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆலையை மூடிய பின்னர், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக குற்றம் சாட்டினார்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பாத்திமா பாபு, வைகோ உள்ளிட்டோர், உள்நோக்கத்துடன் தொடர்ந்த வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதம் செய்தார். ஸ்டெர்லைட் தரப்பு வாதம் இன்றும் (19.12.2019) தொடர்கிறது.