ADVERTISEMENT

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா; ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்

10:00 AM Oct 29, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆன்லைன் விளையாட்டு பற்றி ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜூன் மாதம் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்குத் தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து, அக்டோபர் 1-ஆம் தேதி அன்று அவசரச் சட்ட முன்வரைவு தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் 1-ஆம் தேதியே ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவித்துள்ளது.

தமிழகச் சட்டமன்றத்தில் கடந்த 19 ம் தேதி அவசரச் சட்டத்திற்கு மாற்றாக நிரந்தர தடை சட்டம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் இதற்கான மசோதாவைத் தாக்கல் செய்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு தற்போது ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனை அடுத்து இந்த சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு விரைவில் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT