






Published on 21/03/2023 | Edited on 21/03/2023
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பொதுமக்களிடம் பெறப்பட்ட ஒரு லட்சம் கையெழுத்துகளை வாங்க மறுத்தும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டத்தை நான்கு மாதங்களாகக் கிடப்பில் போட்டு மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி முற்றுகை போராட்டத்தை நேற்று (20.03.2023) நடத்தினர். மேலும் பொதுமக்களிடம் பெற்ற ஒரு லட்சம் கையெழுத்துகளை கிண்டி வட்டாட்சியர் பரணியிடம் ஒப்படைத்தனர்.