ADVERTISEMENT

அடிக்கடி மணல் திருட்டு- களமிறங்கிய சிறப்பு காவல்படை!

11:37 PM May 27, 2019 | kalaimohan

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி முதல் காவேரிப்பாக்கம் வரை பாலாற்றில் மணல் தினம் தினம் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள், லாரிகள், டிப்பர்களில் கடத்தப்படுகின்றன. இதனை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை, காவல்துறை என எந்த துறை அதிகாரிகளும் கண்டுக்கொள்வதில்லை. இவர்களுக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடக்க வாய்ப்பில்லை என இப்பகுதி பொதுமக்களின் குற்றச்சாட்டு. இந்நிலையில் மணல் கடத்தலை தடுக்கவும், கடத்தல்காரர்களை பிடிக்க எஸ்.பி பர்வேஷ்குமார் தலைமையில் சிறப்பு படை ஏ.டி.எஸ்.பி பாலசுப்பிரமணி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT



ADVERTISEMENT

இந்நிலையில், வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பாலாற்றில் இருந்து மே 27ந்தேதி விடியற்காலை பாலாற்றில் இருந்து தேவலாபுரம் கம்பன் கிருஷ்ணம்பள்ளி பகுதியில் மணல் திருடிக்கொண்டு இருந்தனர். அங்கு மணல் திருடி கடத்திக்கொண்டு இருந்த 3 மாட்டு வண்டிகளை வேலூரில் இருந்து வந்த சிறப்பு காவல்படை அந்த வண்டிகளை பிடித்தது.



இதேபோல் சோமலாபுரம் பகுதி பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளை கிராம நிர்வாக அலுவலர் கிருபாகரன் பிடித்துள்ளார். தொடர்ந்து தற்போது ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT