Advertisment

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெமிலி அருகே புன்னை கிராமத்தில் மட்டும் 11007 மற்றும் 11014 ஆகிய பதிவெண் கொண்ட இரண்டு அரசி்ன் மதுபான கடைகள் உள்ளது. இந்த கடைகளுக்கு மட்டும் தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான குடிமகன்கள் வருவார்கள் என்கிறார்கள்.

Two tasmak in the same town ... thieves who handcuffed both!

Advertisment

இந்த கடையின் முன் பக்க பூட்டை உடைத்து கடைகளில் வைக்கப்படிருந்த மூன்று லட்சத்துஇருபத்துஐயாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் மதுபான பாட்டில்கள் செப்டம்பர் 27ந்தேதி இரவு மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28ந்தேதி மதியம் கடையை திறக்க வந்த கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் இதனைப்பார்த்துவிட்டு அதிர்ச்சியாகியுள்ளனர்.

Two tasmac in the same town ... thieves who handcuffed both!

இது தொடர்பாக தங்களது மேலதிகாரிகளுக்கு புகார் கூறியுள்ளனர். அதோடு இதுப்பற்றி நெமிலி காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் சம்பவயிடத்துக்கு வந்து விசாரணை நடத்திவருகின்றனர். அதோடு, கைரேகை நிபுணர்கள் வரவைக்கப்பட்டு அந்த கட்டிடத்தில் உள்ள கைரேகைகளை சேகரித்துள்ளனர்.

இதுதொடர்பாக கடையின் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களிடமும் தனித்தனியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.