ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கியுடன் வடமாநில கொள்ளையர்கள்... 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

05:17 PM Oct 10, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வயதான பெண்ணிடம் நகை வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில நபர்களைப் பிடிக்க நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வயதான பெண்மணியிடம் 6 சவரன் நகையை வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் பறித்துச் சென்றிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து அப்பெண்மணி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஒன்றுதிரண்ட அப்பகுதி மக்கள் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களைத் தேடிச் சென்றனர். அதேபோல் போலீசாருக்கும் தகவல் கூறப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான போலீசார் உடனடியாக வந்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், நகையைக் கொடுக்கவில்லை என்றால் சுட்டு விடுவேன் என்று மிரட்டியதால் நகையைக் கழற்றி கொடுத்ததாகவும் பெண்மணி தெரிவித்துள்ளார்.

துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சுங்கச்சாவடியின் பின்பகுதியில் இருக்கக்கூடிய ஏரி பகுதி வனாந்தர பகுதியாக உள்ள நிலையில், அந்த பகுதி வழியாகத்தான் கொள்ளையர்கள் ஓடினார்கள் என்ற தகவல் தெரிய வர, போலீசார் ஏரியை ஒட்டிய வனப்பகுதியில் கடந்த 5 மணி நேரமாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பத்து குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT