ADVERTISEMENT

ஐ.டி. சோதனை குறித்து முறையான தகவல் இல்லை - கரூர் எஸ்.பி. விளக்கம் 

11:31 AM May 26, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை செய்ய அதிகாரிகள் சென்றனர். ஆனால், அசோக் வீட்டில் இல்லாமல் வீடு பூட்டியிருந்ததால், அதிகாரிகள் வெளியே காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் ஆதரவாளர்களுக்கும் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதத்தில், அசோக்கின் ஆதரவாளரை சோதனை செய்ய வந்த அதிகாரி தாக்கியதாகவும் அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அங்கிருந்த திமுகவினர் மற்றும் அசோக் ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்து வருமானவரித்துறை பெண் அதிகாரியை முற்றுகையிட்டனர். மேலும், அந்த அதிகாரியின் அடையாள அட்டையை காட்டச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் தனது அடையாள அட்டையை காட்டியபின் வீட்டிற்கு அனுமதித்தனர். இந்தச் சம்பவம் நடந்துகொண்டிருக்கும்போதே அதிகாரியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சோதனை செய்ய வந்த அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இந்நிலையில் தற்போது கரூர் எஸ்.பி. இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது; சி.ஆர்.பி.எஃப் வீரர்களும் பாதுகாப்புக்கு வரவில்லை. எங்களுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. கரூரில் வருமானவரித் துறையினர் சோதனை குறித்து முன்கூட்டியே முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. கார் கண்ணாடி உடைக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். அதுமட்டுமல்லாமல் தற்போது கரூர் மாவட்டத்தில் ஐ.டி. சோதனை மேற்கொள்ளப்படும் ஒன்பது இடங்களுக்கும் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக சென்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை


பெண் அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர்


ஐ.டி. அதிகாரியை முற்றுகையிட்ட திமுகவினர்! - முதல்வர் அறிவுறுத்த அண்ணாமலை வலியுறுத்தல்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT