கரோனோ வைரஸ் உச்சக்கட்ட தாக்குதலில் உலகமே நிலைகுலைந்து போன நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் பொருளாதரத்தில் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் கரோனோ நிவாரண நிதி கோரியுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் நிதி வழங்கி வருகின்றனர்.

karur senthil balaji

Advertisment

தமிழக சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் பலர் 5 இலட்சத்தில் இருந்து 50 இலட்சம் வரை நிதி அளித்தனர். இந்த நிலையில் திமுகவின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி உச்சகட்டமான 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.

பாரளுமன்ற எம்.பி.க்கள் 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ள நிலையில் தமிழக எம்.எல்.ஏ.க்களில் அதிகபட்டசமாக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது செந்தில்பாலாஜி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வழங்கிய தொகை அனைவருக்கும் ஆச்சரியத்தை வழங்கியுள்ளது. தொகுதி மக்களுக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment