DMK officials besieged the IT  officer! Annamalai urges Chief Minister to advise

Advertisment

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை செய்ய அதிகாரிகள் சென்றனர். ஆனால், அசோக் வீட்டில் இல்லாமல் வீடு பூட்டியிருந்ததால், அதிகாரிகள் வெளியே காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் ஆதரவாளர்களுக்கும் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதத்தில், அசோக்கின் ஆதரவாளரை சோதனை செய்ய வந்த அதிகாரி தாக்கியதாகவும் அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அங்கிருந்த திமுகவினர் மற்றும் அசோக் ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்து வருமானவரித்துறை பெண் அதிகாரியை முற்றுகையிட்டனர். மேலும், அந்த அதிகாரியின் அடையாள அட்டையை காட்டச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் தனது அடையாள அட்டையை காட்டியபின் வீட்டிற்கு அனுமதித்தனர். இந்தச் சம்பவம் நடந்துகொண்டிருக்கும்போதே அதிகாரியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சோதனை செய்ய வந்த அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

DMK officials besieged the IT  officer! Annamalai urges Chief Minister to advise

Advertisment

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர்களின் ஆதரவாளர்கள் ஐ.டி. அதிகாரிகள் மீதும், அவர்களின் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கட்சிக்காரரை பொறுப்புடன் நடந்துகொள்ளச் சொல்லி அறிவுறுத்த வேண்டும் மற்றும் நாம் 60களில் இல்லை என்பதையும் அவர், அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.