ADVERTISEMENT

ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் ஒப்படைப்பு! 

09:03 AM Apr 04, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்டம் முழுவதும் காணாமல் போன தொலைப்பேசிகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தார்.


அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கடந்த 6 மாதங்களாக தொலைப்பேசிகள் காணாமல் போனது சம்பந்தமாக வழங்கப்பட்ட சி.எஸ்.ஆர். விபரங்கள் பெறப்பட்டு, சைபர் க்ரைம் பிரிவின் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு திருடப்பட்ட மற்றும் தவறவிட்ட சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான 61 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்திற்கு தொலைப்பேசி உரிமையாளர்களை நேரில் வரவைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரியவர்களிடம் அவர்களின் செல்போன்களை ஒப்படைத்தார்.


இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால், சுப்புராயன், மாவட்ட குற்ற ஆவணக்காப்பக பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஆய்வாளர் சுமதி, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT