Student abduction ... Mother and brother arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது காட்டு எடையார். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தியாகதுருகம் அருகிலுள்ள திம்மலை கிராமத்தில் அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தபடி தியாகதுருகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். சம்பவத்தன்று மாணவி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்த அவரது தந்தை, தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

அதில் திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் அப்பு என்கிற மனோ சித்தர் என்பவர் தனது மகளைக் கடத்திச் சென்றதாகவும் இதற்கு உடந்தையாக அவரது தாயார் கம்சலா, அண்ணன் சரத்குமார் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் புகாரில் கூறியுள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பள்ளி மாணவியைக் கடத்திய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்திவந்த நிலையில், தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சந்தேகப்படும்படி இருந்த பெண்ணைப் பிடித்து விசாரணை செய்தனர். அது காணாமல் போன பள்ளி மாணவி என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், மாணவியைக் கடத்திச் சென்ற மனோ சித்தர், தாயார் கம்சலா, அவரது மூத்த மகன் சரத்குமார் ஆகியோர் சோழபாண்டியபுரம் செல்வதற்காக தியாகதுருகம் பஸ் நிலையத்தில் காத்திருப்பதாக மாணவி அளித்த புகாரின் பேரில் மனோ சித்தரின்அண்ணன் சரத்குமார், அவரது தாயார் கம்சலா ஆகியோரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், போலீசாரைக் கண்டதும் தலைமறைவாகியுள்ளஅப்பு என்கிற மனோ சித்தரை போலீசார் தேடிவருகின்றனர். பள்ளி மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பிளஸ் டூமாணவி கடத்தப்பட்ட சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment