Skip to main content

கல்வராயன் மலை கள்ளச்சாராய வீடியோ எதிரொலி - 900 லிட்டர் ஊறல் அழிப்பு

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

nn

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலையடிவாரப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த வனப்பகுதி தான் கல்வராயன் மலைப்பகுதி. நீரோடைகளில் வரும் நீரை எடுத்து சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி மலையடிவாரத்திலேயே சட்ட விரோதமாக விற்பதாக தகவல் வெளியாகியது.

 

இது தொடர்பான வீடியோ காட்சியில் ''என்னப்பா பாக்கெட் சின்னதா இருக்கு 80 ரூபாய்க்கு கொடு'' என ஒருவர் கேட்க, “இப்போயெல்லாம் கிடைக்கிறதே பெருசு. 100 ரூபாய்தான். குறைக்க முடியாது'' என கள்ளச்சாராய பாக்கெட்டுக்கு பேரம் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேட்டரி மூலப்பொருட்களை வைத்து சாராயம் காய்ச்சுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

 

இந்நிலையில் கல்வராயன் மலைப்பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்களில் சென்னை வடக்கு மண்டல அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் ஏழு குழுக்களாக தனிப்படைகள் அமைத்து நேற்று இரவிலிருந்து தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது வஞ்சிகுழி என்னும் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய 1500 கிலோ வெல்லம் கைப்பற்றப்பட்டது. 150 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான உபகரணங்களும் இருந்தது. 900 லிட்டர் கள்ளச்சாராய ஊறலும் இருந்தது. இவை அனைத்தையும் அதே பகுதியில் கொட்டி அழித்த போலீசார், தங்கராசு என்பவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் பலி?; மாவட்ட ஆட்சியர் விளக்கம்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Explanation of the District Collector on 4 people died after drinking fake liquor

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் நேற்று (18-06-24) இரவு, 10க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச்சாரயம் குடித்து வயிற்று வலியாலும், கண் எரிச்சல் பாதிப்பாலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்களில், தற்போது வரை 4 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 7க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 4 பேரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பு வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உயிரிழந்த குடும்பத்தினர் தெரிவிக்கையில், கள்ளச்சாராயம் குடித்துதான் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவிக்கையில், ‘கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழக்கவில்லை. கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தியைப் பரப்புகின்றனர். கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீசோ, மருத்துவர்களோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதில் குடிப்பழக்கமே இல்லாத ஒருவரும் உயிரிழந்துள்ளார். அதனால் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.  

Next Story

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியா? - கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் பேட்டி

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
reported late Kaniyamur school girl mother is contesting in the Vikravandi by-election

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி சந்தேக மரணம் தொடர்பான வழக்கு கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மாணவியின் தாய் செல்வி தரப்பு வழக்கறிஞர் பாப்பா மோகன் மாணவியின் உடற்கூறு ஆய்வு சான்றிதழ் மற்றும் முதல் தகவல் அறிக்கை, பள்ளி வளாகம் மற்றும் உடற்கூறு ஆய்வகம் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம் காவல்துறையினருக்கும், அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் ஒப்படைக்க உத்தரவிட்டதன் பேரில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. 

இன்று காலை நீதிமன்றத்தில் மாணவியின் தாய் செல்வி தற்பொழுது ஆஜராகியுள்ளார். அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் காவல்துறையினர் ஆஜராகாததால், நேரம் குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நீதிமன்றத்தில் காத்திருந்த நிலையில் பின்னர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தேவச்சந்திரன் ஆஜரானார். அப்போது  தாய் செல்வியும் ஆஜரானார். அவர்கள் கூறியிருக்கும் ஆவணங்களை எழுத்துப்பூர்வமாக வழங்குவதற்கு கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஸ்ரீமதி தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுவே விரைவாகத்தான் விசாரிக்கப்படுகிறது என நீதிபதி விளக்கம் அளித்தார். 

இதனிடையே நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாணவியின் தாய் செல்வி போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வியிடம் இது குறித்து கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த செல்வி, “விக்கிரவாண்டி இடைத்தேரலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலம் அவகாசம் குறைவாகவே உள்ளதால் அதற்குள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் தயாரானால் போட்டியிடுவேன். இல்லையென்றால் போட்டியிடவில்லை” எனக்கூறியுள்ளார்.