Skip to main content

கொறடா ராஜேந்திரனை நீக்கக்கோரி சபாநாயகரிடம் தினகரன் தரப்பினர் மனு

Published on 11/09/2017 | Edited on 11/09/2017
கொறடா ராஜேந்திரனை நீக்கக்கோரி சபாநாயகரிடம் தினகரன் தரப்பினர் மனு

அரசு கொறடா ராஜேந்திரனை நீக்கக்கோரி டி.டி.வி.தினகரன் சார்பில் சபாநாயகரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுரை சந்தித்து மனு அளித்தனர். இதனால் தன்னை ஆலோசிக்காமல் ஆளுநரிடம் மனு அளித்த 19 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகர் தனபாலுக்கு அ.தி.மு.க.வின் கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். 

கொறடா ராஜேந்திரன் பரந்துரையை ஏற்று 19 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். செப்டம்பர் 18-ம் தேதிக்குள் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அரசு கொறடா ராஜேந்திரனை நீக்கக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் சபாநாயகரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் கொறடா ராஜேந்திரன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்