ADVERTISEMENT

நீட் நுழைவு தோ்வு; தோ்வா்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...

06:14 PM May 04, 2019 | manikandan

நீட் நுழைவு தோ்வு நாளை நாடு முழுவதும் 155 நகரங்களில் நடக்கிறது. தோ்வா்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மருத்துவ படிப்பில் சோ்வதற்கான மத்திய அரசு நடைமுறை படுத்தியுள்ள நீட் எனப்படும் தேசிய நுழைவு தோ்வு நாளை மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த தோ்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சத்திற்கு மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். இதற்காக 155 நகரங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.


தமிழகத்தில் நீட் தோ்வுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா். இதற்காக தோ்வு மையங்கள் 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. குமாி மாவட்டத்தில் இந்த தோ்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டுள்ள நாகா்கோவில் ஒழுகினாசோியில் உள்ள எஸ்.ஏ. ராஜாஸ் இன்டா்நேஷனல் பள்ளில் 912 மாணவ மாணவிகளும், அஞ்சு கிராமத்தில் உள்ள ரோகினி இன்ஜினியாிங் கல்லூாியில் 1020 மாணவ மாணவிகளும், நாகா்கோவில் பொன் ஜெஸ்லி என்ஜினியாிங் கல்லூாியில் 1020 மாணவ மாணவிகளும், சுங்கான்கடை புனித சேவியா் கல்லூாியில் 1020 மாணவ மாணவிகளும் என மாவட்டத்தில் மொத்தமுள்ள இந்த 4 மையங்ளில் 3972 போ் தோ்வு எழுதவுள்ளனர்.

மதியம் 2 மணிக்கு தொடங்கும் தேர்விற்கு மாணவர்கள், தோ்வு மையம் அமைந்துள்ள கல்வி வளாகத்தினுள் 11.30 மணியில் இருந்து 1.30 மணி வரை தான் அனுமதிக்கப்படுவாா்கள். அதன்பிறகு ஓரு நொடி தாமதமானாலும் தோ்வா்கள் அனுமதிக்க மாட்டாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தோ்வா்கள் ஒரு பாஸ்போா்ட் புகைப்படம் கொண்டு வருவதுடன் அரசு அங்கீகாித்த அடையாள அட்டை ஓன்றையும் கொண்டுவர வேண்டும். புத்தகம், பென்சில், கால்குலேட்டா், ரப்பா், பவுச், பென்டிரைவ், ஸ்கேல், எழுதும் பேடு, செல்போன், இயா்போன், கேமரா, பேஜா், கைகடிகாரம், தோள் பை, பா்ஸ் ஆகியவை கொண்டுவரக்கூடாது. பெல்ட், தொப்பி, ஷீ, சாக்ஸ், பிரேஸ்லெட், மோாதிரம், வளையல், கம்மல், செயின் அணிந்து வரக்கூடாது.


அதேபோல் அரை கையுடன் கூடிய நைஸ் ஆடைகளை அணிவதோடு ஸ்லிப்பா் செருப்புகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில் குறிப்பிட்ட மதம் சாா்ந்த ஆடைகளை அணிந்து வரும் தோ்வா்கள் சோதனைக்கு வசதியாக 12.30 மணிக்குள் தோ்வு மையத்தில் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தலைமுடியில் கிளிப் வைத்திருந்தால் அதை அகற்றப்படும். மேலும் ஆடை விஷயத்தில் கடந்தமுறை பின்பற்றபட்டதை போன்று இந்த முறையும் இருப்பதால் அதை தோ்வா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தோ்வறைக்குள் புகைப்படம், ஹால் டிக்கெட், மற்றும் அடையாள அட்டை தவிர வேறு எந்த பொருளையும் கொண்டு செல்வதை தோ்வா்கள் தவிா்ப்பது நல்லது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT