/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bxvcbzxg.jpg)
புவனகிரி அருகே பின்னலூர் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி மின்துறையில் ஒயர்மேனாக பணியாற்றிவருகிறார். இவரது மகள் பானுப்பிரியா நீட்தேர்வில் 116 மதிப்பெண்கள் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். இவர் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பின்னலூர் அரசு பள்ளியிலும், ப்ளஸ்1, ப்ளஸ்2 வகுப்பை வடலூர் புதுநகர் அரசுப்பள்ளியிலும் படித்துள்ளார். மிகவும் ஏழ்மை நிலையில் குடிசை வீட்டில் வசித்து வரும் பானுப்பிரியா, பனிரெண்டாம் வகுப்புபடிக்கும்போது எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு அவரது இடது காலில் எலும்புமுறிவு ஏற்பட்டு தற்போது நடப்பதற்கு சிரமமான நிலையில், மருத்துவ சிகிச்சையோடு வாழ்ந்து வருகிறார்.
சிறுவயது முதலே டாக்டராக விருப்பம் இருந்து வந்ததால் அரசுப்பள்ளியில் நீட்தேர்வுக்கான இலவச பயிற்சியில் கலந்துகொண்டு தமிழக அரசு நீட் தேர்வு மாணவர்களுக்காக வழங்கிய அனைத்து உதவிகளையும் கொண்டு நீட் தேர்வினை எழுதியதாக கூறுகிறார். தனதுஆசிரியர்கள் மற்றும் தனது குடும்பத்தினர் தந்த தொடர் உற்சாகத்தினால்தான் இந்த வெற்றியை பெற முடிந்தது என அவர் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
மாணவி மிகவும் வறுமை நிலையில் நீட்தேர்வில் வெற்றிபெற்ற பின்பு தொடர்ந்து படிப்பதற்குஅரசு உதவி கிடைத்தால் பெரிதும் உதவியாக இருக்கும். எங்கள் வீட்டில் மூன்றுபெண்பிள்ளைகள், ஒரு தம்பிஉள்ளனர். எங்க அப்பாவின் வருமானத்தை வைத்து சாப்பிடுவதற்கே சிரமமாக உள்ளது. எனவே நான் நல்லா படிக்க நினைக்கிறேன். நல் உள்ளம் படைத்தவர்கள் என் கல்விக்கு உதவி செய்யவேண்டும் என கூறினார்.
இதனையறிந்த சி.ஐ.டி.யு. மத்திய மின் அமைப்பின் கடலூர் முன்னாள் மாவட்ட தலைவர் ஆதிமூலம், மற்றும் மாவட்ட பொருளாளர் கோவிந்தரசு, மாவட்ட இணை செயலாளர் ராசா,இளவழகன் ஆகியோர் நேரில் சந்தித்து மாணவிக்கு சால்வை அனிவித்து வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கினார்கள். பானுப்பிரியாவின் தந்தை சி.ஐ.டி.யு. மத்திய மின் அமைப்பு சங்கத்தின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)