Skip to main content

உயிரோடு  இருந்து கொண்டே செத்துக் கொண்டிருக்கிறார்கள் - வைகோ

Published on 07/06/2018 | Edited on 07/06/2018

நீட் தேர்வு என்பது நயவஞ்சகமான செயல் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். 


கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 
 

‘நீட்’ என்கின்ற மரண கயிறை மத்திய அரசு தமிழகத்தில் கொண்டு வந்து திணித்துள்ளது.  தமிழகத்தின் ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட தலித் போன்ற சமூகங்களை சேர்ந்த குடும்ப பிள்ளைகள் 1150, 1170 மதிப்பெண்கள் பெற்றாலும் அவர்கள் மருத்துவ கல்லூரி கனவு, நிறைவேறாமல் தற்கொலை செய்து கொண்டு மடிக்கிறார்கள். 

 

 

 

நான் இங்கே இறங்கியேவுடன் எனக்கு கிடைத்த அதிர்ச்சி செய்தி திருச்சியை சேர்ந்த சுபா ஸ்ரீ என்ற மாணவி  நீட் தேர்வில் வெற்றி பெற்றும் தன்னால் மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லையே என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தந்தை ஒரு பேருந்து ஓட்டுனர். 
 

 

This is the choice of destroying our future

 

இதைப்போல் தான் பிரதீபா எழுதிய கடிதத்தில் ஏற்கனவே 1170 மார்க் எடுத்ததால் கிடைத்தது. ஆனால் தனியார் கல்லூரியில் கிடைத்தால் பணம் கட்டமுடியவில்லை. அடுத்த வருடம் அரசு கல்லூரியில் வாங்கிவிடுவேன் என்று திரும்பி நீட் தேர்வு எழுதினார். இந்த தடவையும் கிடைக்கவில்லை என்று அப்பாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ‘உங்க ஆசை கனவை நிறைவேற்ற முடியவில்லை நான் பாரமாக இருக்க விரும்பவில்லை நான் போய்யிட்டு வரேன்’ அப்படி எழுதி வைத்து இறந்திருக்கிறார். அனிதாவும் இப்படிதான் தற்கொலை செய்து கொண்டார். 

 

 

 

இன்றைக்கு 91.1 சதவீதம் +2 வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆனால் நீட் என்கிற முறையில் தமிழ்நாடு 34வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. 60 சதவீதம் 65 சதவீதம் தேர்ச்சி பெற்ற மற்ற இடங்கள் எல்லாம் முதல் இடத்துக்கு வந்துவிட்டது. நம் எதிர்காலத்தையே அழிக்கக்கூடியது இந்த நீட் தேர்வு திட்டமிட்ட நயவஞ்கமான வேலை. இந்த நீட் தேர்வை திணிக்க முற்படுவது வளரும் பிள்ளைகளின் கல்வியை அழிக்கும் நோக்கம். இந்த நீட் தேர்வு பல உயிர்களை காவு வாங்கிவிட்டது. உயிரோடு இருக்கின்ற பிள்ளைகளும் தற்கொலை செய்யாவிட்டாலும் கூட மனதுக்குள் மடிந்து, நொடிந்து உயிரோடு  இருந்து கொண்டே செத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்