ADVERTISEMENT

அதிமுக ஓட்டையை அடைக்கும் பெரிய கொத்தனார்!  -மண்டை உடைப்பில் மந்திரி பெருமிதம்!!!

09:31 AM Sep 26, 2018 | cnramki

ADVERTISEMENT

திமுக – காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி, விருதுநகர் தேசபந்து மைதானத்தில், விருதுநகர் மாவட்ட அதிமுக கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

ADVERTISEMENT

“நாங்க எப்படி சும்மா இருப்போம்! நாங்க ஏற்கனவே விசிலடிச்சு வந்த ஆளுக. அடுத்தவன் உட்கார்ந்திருக்கான்னா.. மேடையில இருந்துக்கிட்டு கரெக்டா கல்லுட்ட அடிக்கிற ஆளுக. கவுந்தடிச்சிட்டு மண்டைய உடைக்கிற ஆளுக. இப்படிப்பட்ட ஆளுகதான் நாங்க அதிமுகவுல பெருவாரியா இருக்கோம். எங்ககிட்டேயாவா?” என, அதிமுகவினரின் புஜபலபராக்கிரமத்தை ரொம்பவே எடுத்துவிட்ட கே.டி.ராஜேந்திரபாலாஜி “நம்ம கட்சியில பேஸ்மட்டம் வெயிட்டா இருக்கு. பில்டிங்ல கொஞ்சம் கிராஸ் அடிக்கும். அதை சரி பண்ணிக்கலாம். ஆனா.. அங்கே பில்டிங் நல்லாயிருக்கு. பேஸ்மட்டம் வீக்கா இருக்கு. கீழ ஆடுது. அப்புறம் எப்படி திமுக நிற்கும்? ஸ்டாலினை யாரும் விரும்பலியே! திமுகவை யாரும் விரும்பலியே! எம்.ஜி.ஆர். வாங்கிக்கொடுத்த ஹெர்குலிஸ் சைக்கிளில் போய்த்தான் முரசொலி மாறன் படிச்சாரு. உள்ளுக்குள்ளேயே தயாநிதி மாறனும் கலாநிதி மாறனும் ஸ்டாலினுக்கு வேட்டு வச்சிக்கிட்டு இருக்காங்க. அழகிரி பேசுறதுதான் வெளிய தெரியும். அவங்க ரெண்டு பேரும் என்ன பண்ணுறாங்கங்கிறது எங்களுக்குத்தான் தெரியும். நமக்கு பேஸ்மட்டம் வெயிட்டா இருக்கிறதுனால, பில்டிங்ல கிராஸ் இருந்தாக்கூட லைட்டா பூசிருவோம். அதுக்குப் பெரிய கொத்தனாரெல்லாம் இருக்காங்க நம்மகிட்ட. அவங்கள வச்சி சரியா பூசி, எங்கெங்கே ஓட்டை இருக்கோ, அங்கேயெல்லாம் அடைச்சு, திருப்பரங்குன்றத்துலயும், திருவாரூர்லயும் அடிச்சு வந்திருவோம்.


தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அண்ணா சமாதி, கலைஞர் சமாதி தெரியவில்லை. பொம்மை போல இருக்கிறார். அம்மா வாக்கு தெய்வ வாக்கு. அவங்க சொன்னபடி, தேமுதிக இன்னிக்கு அழிஞ்சு போச்சு. ஈழத்தமிழர் பிரச்சனையை எங்களைவிட அதிகம் தெரிந்தவர் வைகோ. நீங்க போய் அங்கே சேர்ந்திருக்கீங்க. ஒண்ணு வெளியே வந்திருங்க. இல்லைன்னா.. அங்கேயே இருந்து அவங்கள முடிச்சிட்டு வாங்க. கூவத்தூரில் அவிழ்த்துப் போட்டு ஆடியது கருணாஸ்தான். குடித்துவிட்டு ஆடியதும் கருணாஸ்தான். எடப்பாடியை மறிக்க முடியுமா? இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பின்னால் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். முதலமைச்சரிடம் கோயம்பேடு மார்க்கெட் கேட்டார் கருணாஸ். ஏலத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் முதல்வர். உடனே கோபத்தில் வெளியேறிவிட்டார்.

ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு, நாங்க கொஞ்சம் சுணக்கம் காட்டியதுதான் காரணம். திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தலில் விட மாட்டோம். அதிமுக வேட்டி கட்டியிருக்கிறவன் எல்லாரும் அதிமுககாரன் இல்ல. இரட்டை இலை சின்னம் வைத்திருப்பவன்தான் அதிமுககாரான். அம்மா காட்டியது இரட்டை இலை சின்னத்தைத்தான். வேறு எந்த சின்னத்தையும் காட்டவில்லை. டீசல், பெட்ரோல் விலை உயர்ந்தாலும், தமிழகத்தில் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி அண்ணன். கன்னியாகுமரியில் அதிமுக பலம் பெற்றிருக்கிறது. திமுகவுக்கு நான் சவால் விடுகிறேன். இனி எந்தத் தேர்தலிலும் முந்த முடியாது.” என்றார் அதிரடியாக.

1989-ல் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, ஜெயலலிதா போடிநாயக்கனூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டது அமைச்சருக்குத் தெரியாது போலும். அதிமுக விரிசலை சரிபண்ணக்கூடிய வல்லமை பெற்ற பெரிய கொத்தனார் யார் என்பதை கடைசிவரை கே.டி.ராஜேந்திரபாலாஜி சொல்லவே இல்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT