New 108 ambulance vehicles with modern medical facilities!

இந்த கரோனா காலகட்டத்தில் ஆம்புலன்ஸ் சேவை மகத்தானது. ஆனாலும், தமிழகத்தில் இச்சேவையானது விரிவுபடுத்த வேண்டிய நிலையிலேயே உள்ளது.

Advertisment

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. கரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலமே மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

Advertisment

விருதுநகர் மாவட்டம் முழுவதும், தற்போது 18 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. ஆனாலும், இவை போதுமானதாக இல்லை. இந்நிலையில், கூடுதலாக ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று, சிவகாசியில் புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் முன்னிலையில், கொடியசைத்து துவக்கி வைத்தார், கே.டி.ராஜேந்திரபாலாஜி.

2 பெரிய ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர்காக்கும் வென்டிலேட்டர், மாரடைப்பு ஏற்படும்போது உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும்மருந்துகள், பயிற்சி பெற்ற மருத்துவப்பணியாளர்களுடன், நடமாடும் மருத்துவமனையாக செயல்படக்கூடிய அளவுக்கு, அனைத்து மருத்துவ வசதிகளுடன் இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளதாக, மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.