ADVERTISEMENT

67 ஆவது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!  

11:53 AM Oct 24, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேட்டூர் அணை கடந்தாண்டு மட்டும் நான்கு முறை 100 அடியை எட்டிய நிலையில், இந்த ஆண்டு முதல் முறையாக 100 அடியை எட்டியுள்ளது. இதனால் மொத்தமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67வது முறையாக 100 அடியை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 28,650 கன அடியாக உள்ளது. டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக் கட்டி முடிக்கப்பட்ட 88 ஆண்டுகளில் 67 ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.

தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பாசன தேவைக்கான தண்ணீர் குறைந்தே இருக்கிறது. மீண்டும் மழை குறைந்து மேட்டூர் அணையில் பாசனத்திற்காக நீர் திறந்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவதற்கு வாய்ப்புள்ளது. வரும் 27ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பாசன தேவை குறையும். இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT