ADVERTISEMENT

ஸ்ரீரங்கத்தில் இருந்து ஏழுமலையானுக்கு அனுப்பபட்ட மங்களப் பொருட்கள்!

06:22 PM Jul 16, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சுமார் 40 வருடங்கள் இருந்ததை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஆடி முதல் தேதி ஆனி வார ஆஸ்தானம் நடைபெறும். அப்போது ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் திருமலை ஏழுமலையானுக்கும், தாயார்க்கும் பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம்.

ADVERTISEMENT

அதை முன்னிட்டு இன்று(16.07.2021) தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே .சேகர்பாபு, துறை செயலளர் சந்திரமோகன் IAS, துறை ஆணையாளர் ஜெ. குமரகுருபரன் IAS, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, அர்ச்சகர் சுந்தர் பட்டர், கண்காணிப்பாளர் வேல்முருகன், திருப்பதியில் உள்ள ஸ்ரீரங்கம் ஸ்ரீ நாராயணஜீயர் மடத்தின் பொறுப்பாளர் ராஜா ரெட்டி மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் பணியாளர்கள் பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்களப் பொருட்களை எடுத்துக் கொண்டு நான்கு திருமடவீதிகளை வலம் வந்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜவகர்ரெட்டி, இணை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோரிடம் ஒப்படைத்தனர். பின்பு ஏழுமலையாளனுக்கு பட்டு வஸ்திரங்கள் சாற்றப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT