trichy srirangam ranganathar temple thai car festival pilgrims participated 

திருச்சி ஸ்ரீரங்கத்தில் புகழ்மிக்க பூபதி திருநாள் முக்கிய திருவிழாவான தைத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Advertisment

108 வைணவத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதிதிருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஸ்ரீராமர் பிறந்த புனர்பூச நட்சத்திரத்தில் இந்த தேரோட்டம் வருடம் தோறும் தை மாதத்தில் நடைபெறுவது மிகவும் விசேஷமானது. தினசரி நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

Advertisment

விழாவின் முக்கிய நிகழ்வான தைத்தேரோட்டம் இன்று தொடங்கியது இதற்காக அதிகாலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தேர்மண்டபம் வந்தடைந்தார்.பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேரில் எழுந்தருளிய நம்பெருமாளை பெரும் திரளான பக்தர்கள் ரங்கா! ரங்கா! கோவிந்தா! கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.