
கரோனா பரவல் தடுப்பு காரணமாக கோவில்களில் அதிக அளவில் பக்தர்கள் கூடுவதற்கு அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த நிலையில், தினமும் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு சுமார் 500 பேர் முதல் ஆயிரம் பேர் வரை கோவிலுக்குத் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், பேரளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் (78) என்ற வைணவ பக்தர்.
இவர், உலகையே உலுக்கிவரும் கரோனா தொற்று நோய் ஒழிவதற்காக, ஸ்ரீரங்கத்தில் உள்ள 1.5 கிலோ மீட்டர் நீளமுள்ள முக்கிய வீதியான 4 உத்திர வீதியில் காயத்திரி மந்திரம் சொல்லிக்கொண்டே அங்கப்பிரதட்சணம் செய்தார். இறுதியாக ஸ்ரீரங்கத்தின் தெற்கு கோபுரத்தில் அங்கப்பிரதட்சணத்தை நிறைவு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “உலகையே உலுக்கிவரும் கரோனா நோயை ஒழிப்பதற்காக நம்பெருமாளிடம் வேண்டி அங்கப்பிரதட்சணம் செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)