ADVERTISEMENT

மதுரை நகைக்கடை ஊழியர்களிடம் வழிப்பறி! தலைமைக் காவலர்கள் இருவருக்கு ஓராண்டு சிறை!

10:22 PM Mar 13, 2020 | Anonymous (not verified)

நகைக்கடை ஊழியர்களைத் தாக்கி 4 லட்ச ரூபாயை பறிக்க முயன்ற வழக்கில், இரண்டு தலைமைக் காவலர்களுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT



மதுரை நகைக்கடை ஒன்றின் ஊழியர்கள் தங்களது கடைக்காக, சென்னையில் உள்ள சுரானா ஜுவல்லர்ஸில் நகை வாங்க 4 லட்ச ரூபாயுடன் சென்னை வந்தனர். அவர்களை வழிமறித்த மதுரை எஸ்.பி.சி.ஐ.டி. தலைமைக் காவலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் மதுரை திருமங்கலம் காவல் நிலைய தலைமைக் காவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் இருவரையும் மிரட்டி 4 லட்ச ரூபாயை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த யானைகவுனி காவல் நிலையத்தினர் அந்த ஆட்டோவை மடக்கி விசாரணை நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் பாஸ்கர், ரவி, மாரிமுத்து, முத்துசரவணன், அனீஃபா, சவுகத் அலி உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால், இந்த இரண்டு பேர்கள் உள்ளிட்ட 8 பேர் மீதுசென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு கைது செய்தனர். கடந்த 2005-ல் நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து 2008 நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், இரண்டு தலைமைக் காவலர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனையும் தலா 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மற்ற 6 பேர் சம்பவ இடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை எனக் கூறி, அந்த ஆறு பேரையும் விடுதலை செய்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT