Do political leaders keep their promises? Court question

Advertisment

மதுரை வாசுதேவநல்லூர் தொகுதியைபொது தொகுதியாக அறிவிக்கக் கோரிய வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை அடுக்கடுக்கானகேள்விகளை எழுப்பியுள்ளது. பிரியாணி, மது பாட்டில்களுக்காக வாக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இலவச திட்டங்களை நிறைவேற்றுவதால் மாநிலத்தின் நிதிச்சுமை கூடுகிறது.

நிதிச்சுமையை சமாளிக்க மதுக்கடைகள் அதிகரிக்கப்படுவதாக காரணம் காட்டப்படுகின்றன. அதனை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும். சமூக நலத்திட்டங்கள் எனும் பெயரில் மக்களை சோம்பேறியாக்கும் திட்டங்களை அறிவிக்கின்றனர். மேலும் தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகள், வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுகிறார்களா?

வாக்குகளை விற்பனை செய்துவிட்டு, நல்ல அரசியல் தலைவர்களைமக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?மக்களை சோம்பேறியாக்கும் அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது? என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.