No 'first respect' in Jallikattu - High Court orders!

Advertisment

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் பொங்கல் தைத்திருநாள் முதல் நாளன்று, 'ஜல்லிக்கட்டு'போட்டி நடைபெறுவது வழக்கம். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவை மாற்றியமைக்க உத்தரவிடக்கோரிஅன்பரசன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்வழக்குத்தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், "அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அன்று எந்தச் சமூகத்திற்கோ,காளைக்கோ 'முதல் மரியாதை' கிடையாது.அதேபோல்ஜல்லிக்கட்டு விழா, கணக்கு விவரங்களைப் பராமரிக்க தனி வங்கிக் கணக்கைத் தொடங்கவேண்டும். அதேபோல் ஜல்லிக்கட்டு விழாவில், அரசியல்கட்சி,சமூகம் தொடர்பானகொடிகள், பேனர்கள் வைக்கக்கூடாது. ஜல்லிக்கட்டு நிகழ்வு குறித்தஅறிக்கையின் முழு விவரங்களை வீடியோபதிவாகதாக்கல் செய்யவேண்டும்" எனநீதிபதிகள் உத்தரவிட்டனர்.