ADVERTISEMENT

மாநில தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் புகார்...!

11:33 PM Jan 02, 2020 | Anonymous (not verified)

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களா நடத்தப்பட்டு, அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் காலதாமதம் செய்யப்படுகிறது என்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் புகார் மனு அளித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காக அதிமுக, போலீஸ் மற்றும் அதிகாரிகள் சதி செய்கிறார்கள். வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தாமதமாக அறிவிக்கிறார்கள் என குற்றம்சாட்டினார். இந்நிலையில் மீண்டும் புகார் மனு அளிக்க சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு தற்போது (இரவு 11.27) வருகை தந்துள்ளார். அப்போது துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கிரிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT