எட்டு வழி சாலைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செய்துள்ள மேல்முறையீட்டை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னைஉயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில் உயர்நீதிமன்றதின் இந்த உத்தரவை எதிர்த்து இன்றுதமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த வழக்கானது ஜூன் 3 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்த நிலம் கையகபடுத்தும் முயற்சியில் இருந்த இந்த 8 வழி சாலை திட்டதிற்கு கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி தடைவிதித்து8 வாரத்திற்குள் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் இந்த செயல் மக்களுக்கு செய்யும் துரோகம்.இப்போதுஅதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் நிலைப்பாடு என்ன என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.