ADVERTISEMENT

வாக்காளர்களுக்கு சந்தனம், குங்குமம் கொடுத்து கேன்வாஸ் செய்த வேட்பாளர்கள்...!

04:18 PM Dec 27, 2019 | Anonymous (not verified)

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் 22 கிராம ஊராட்சிகள் உள்ளன. இது தவிர 2 மாவட்ட கவுன்சிலர், 17 ஒன்றியக் கவுன்சிலர்கள் மற்றும் 22 கிராம ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலை முன்னிட்டு ஆத்தூர் ஒன்றியத்தில் மலை கிராமமான மணலூர் ஊராட்சி உட்பட 177 வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT



அம்பாத்துரை ஊராட்சியில் அதிகாலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த வண்ணம் இருந்தனர். இதுபோல கலிக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளியில் கோட்டப்பட்டி மற்றும் அருகிலுள்ள நெசவாளர்கள் காலனியை சேர்ந்த பொதுமக்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பஞ்சம்பட்டி ஊராட்சியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆளும் கட்சியை மிஞ்சும் வண்ணம் பந்தல் அமைத்து ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, சந்தனம், குங்குமம் வைத்து வாக்காளர்களை தாங்கள் போட்டியிடும் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தனர்.

பஞ்சம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களை 3 சக்கர சைக்கிளில் அழைத்து வந்து உறவினர்கள் அவர்களை வாக்குப்பதிவு செய்ய வைத்தனர். தேர்தல் அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு முன்னுரிமை கொடுத்து விரைவாக வாக்குப்பதிவு செய்ய வைத்தனர்.



கிராம ஊராட்சிகளில் வாக்காளர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரோஸ் நிற வண்ணத்திலும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மஞ்சள் நிற வண்ணத்திலும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இளம்பச்சை நிறத்திலும், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வெள்ளைநிற தாளில் பொறிக்கப்பட்ட அவர்களுடைய சின்னங்களில் வாக்களித்தனர்.

கிராம ஊராட்சிகளில் வாக்காளர்கள் 4 வாக்குகள் அளித்தனர். பஞ்சம்பட்டி மைதானம் அருகே வாக்குப்பதிவு செய்துவிட்டு வந்த வாக்காளர்களுக்கு டீ, காபி, தண்ணீர்பாட்டில் கொடுத்து உபசரித்தனர். இது குறித்து சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் கூறுகையில் வார்டில் உள்ள உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரு ஓட்டில் கூட வெற்றி பெற வாய்ப்புள்ளதால் ஒரு ஓட்டை கூட நாங்கள் இழக்கமாட்டோம் என்றனர். ஆத்தூர் ஒன்றியத்தில் காலை 9 மணி நிலவரப்படி 8.22 சதவீதமும் 11 மணி நிலவரப்படி 20 சதவீதமும் வாக்குபதிவாகி இருந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT