எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல.. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் பணம் வாங்குவதும் குற்றம் என்று விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஒருபக்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மற்றொரு பக்கம் பணம், பரிசு பொருட்கள் வாக்காளர்களை நோக்கி சென்று கொண்டு தான் இருக்கிறது. இதைப் பார்த்து தான் மறமடக்கி கிராமத்தில் 'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' என்று இளைஞர்கள் தங்கள் வீட்டு சுவர்களில் எழுதி வைத்துள்ளனர்.

  local body election Voters Coconut trees police

Advertisment

Advertisment

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியக்குழு உறுப்பினருக்காக அமமுக சார்பில் பிலாவிடுதி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் போட்டியிடுகிறார். அவரது சின்னம் தென்னை மரம் ஆகும். அமமுக வேட்பாளர் ரமேஷின் ஆதரவாளர்கள் நேற்று (24.12.2019) மாலை மயிலன்கோன்பட்டி யாதவர் தெருவில் அவரது சின்னத்தை குறிக்கும் வகையில் தென்னங்கன்றுகளை வாக்காளர்களுக்கு வழங்குவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க, அங்கு சென்ற பறக்கும் படை அதிகாரி முருகேசன் தென்னங்கன்றுகளைக் கொடுத்துக் கொண்டிருந்த ஹரிஹரனை பிடித்து கறம்பக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் ஹரிஹரனிடம் இருந்த 100 தென்னங்கன்றுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் அமமுக வேட்பாளர் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து, பின்பு சொந்த ஜாமினில் விடுதலை செய்தனர்.