கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பழைய கடை வீதியை சேர்ந்தவர் சிக்னல் ஆறுமுகம். இவர் ஊத்தங்கரை தேர்வுநிலை பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர். அதிமுகவில் வார்டு செயலாளராகவும் இருந்து வருகிறார்.

Advertisment

LocalBodyElection-Voter-Fraud-Arrested

இந்நிலையில், சின்னம் வேறுபட்டதால் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பாவக்கல் அருகே உள்ள சின்னா கவுண்டனூரை சேர்ந்த லாரி ஓட்டுநரான தனபால் ஊரில் இல்லை என்பதை தெரிந்து கொண்ட, அதிமுக பிரமுகர் ஆறுமுகம் வாக்குச்சாவடி எண் 188ல் அந்த வாக்கை செலுத்த முயற்சித்துள்ளார். அப்போது அங்கிருந்த ஏஜெண்டுகள் அவரை கையும் களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment