ADVERTISEMENT

கட்சி வாரியான வேட்பாளர்களின் குற்றவழக்குப் பட்டியல்... இடம் பிடிக்காத நாம் தமிழர், ம.நீ.ம! 

06:23 PM Apr 01, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக, திமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் சார்பில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர்ராஜ் வேட்பாளர்கள் குறித்த விவரங்களை உள்ளடக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 3,998 வேட்பாளர்களில் 3,559 வேட்பாளர்களின் விவரங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. போட்டியிடும் 3,559 வேட்பாளர்களில் 466 பேர் தங்கள் மேல் குற்றவழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். 207 பேர் மீது மிகக் கடுமையான குற்றபிரிவு வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

திமுக அறிவித்த 178 வேட்பாளர்களில், 136 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளது. அதிமுக அறிவித்த 191 வேட்பாளர்களில், 46 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளது. பாஜக அறிவித்த 20 வேட்பாளர்களில், 15 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளது. காங்கிரஸ் அறிவித்த 21 வேட்பாளர்களில், 15 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளது. தேமுதிக அறிவித்த 60 வேட்பாளர்களில், 18 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளது. பாமக அறிவித்த 23 வேட்பாளர்களில் 10 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளது. குற்றவியல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் பட்டியலில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக போன்றவை இல்லை.

அதேபோல், மொத்த 3,559 வேட்பாளர்களில் 652 பேர் கோடீஸ்வரர்கள். அதிமுகவில் 164 வேட்பாளர்களும், திமுகவில் 155 வேட்பாளர்களும், காங்கிரஸில் 19 வேட்பாளர்களும், பாஜகவில் 15 வேட்பாளர்களும், தேமுதிகவில் 19 வேட்பாளர்களும், பாமகவில் 14 வேட்பாளர்களும் ஒரு கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ளதாக தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், வேட்பாளர்களின் கல்வி விவரங்கள் குறித்த ஆய்வில் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் 1,731 பேர் ஆவர். பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேட்பாளர்கள் 1,143 பேர். எழுதப்படிக்க தெரியாதவர்கள் 106 பேர் ஆகும். மொத்த வேட்பாளர்கள் 3,559 பேரில், 11 சதவீதம் அதாவது 380 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT