Skip to main content

நாம் தமிழர் சீமான் அதிரடி... திமுக, அதிமுக ஷாக்!

 

seeman

 

நாம் தமிழர் கட்சியின், ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களுக்கான தேர்தல் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் தஞ்சை மாவட்டத்தில் இன்று நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 35 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். தொடர்ந்து அரசியல் களத்தில் தனித்துப் போட்டியிட்டு வரும் சீமான் தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வேட்பாளர்களை அறிவிதுள்ளார். 2021 சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக, வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. 

 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் திமுக, அதிமுக தோல்வி அடைந்தன. அந்த வாக்குகளை நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் பெற்றிருந்தது. இதனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது திமுக, அதிமுக கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.