ADVERTISEMENT

"மறைமுகத் தேர்தல் வந்தால் ஆள் தூக்கும் வேலையை ஆளுகின்ற அரசு செய்யும்"- கே.எஸ்.அழகிரி தாக்கு!

04:14 PM Nov 30, 2019 | Anonymous (not verified)

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் கடந்த எட்டு ஆண்டுகளை விட மிக மோசமாக நாடு உள்ளது. எளிய பொருளாதார வழி தெரியாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்த மோடியால் இந்த நாடு வீழ்ச்சியைக் கண்டு வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

ADVERTISEMENT



பின்னர் கோட்சே இந்த நாட்டின் தேச பக்தர் என்று சொன்னால் காந்தி யார்? என்று கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து இலங்கையில் அனைவருக்கும் அதிகார பகிர்வு வர வேண்டும் என்பதற்காக ராஜபக்சேவிற்கு மோடி அழுத்தம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து உள்ளாட்சி தேர்தலில் மறைமுகமாக தேர்தல் வந்தால் ஆள் தூக்கும் வேலையைக் ஆளுகின்ற அரசு செய்யும் என்பதால் நேரடி தேர்தல் தான் வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பின்னர் மகாராஷ்டிராவில் பாஜக எப்படி ஆட்சி அமைத்தது என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். குடியரசு தலைவர் ,ஆளுநர்கள்தான் அரசியலமைப்பு சட்டத்தைக் காக்க வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய தவறியதை உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது என்று கூறிய அவர், மகாராஷ்ராவில் எப்படி ஆட்சி அமைத்ததோ, அதேபோல் கோவாவிலும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT