ADVERTISEMENT

மரணத்தை விடவும் துயரமானது! -ஞானி மறைவுக்கு ஈரோடு தமிழன்பன் இரங்கல்

07:50 PM Jul 22, 2020 | kalaimohan

ADVERTISEMENT

எழுத்தாளர் ஞானி மறைவுக்கு ஈரோடு தமிழன்பன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அறிஞர் கோவை ஞானி தமிழ் ஆய்வின் தனித்த அடையாளமாக இயங்கி வந்தவர். பெரியாரியம், மார்க்சியம், தமிழ்த்தேசியம் என்னும் முக்கோண வடிவமைப்புக் கோட்பாட்டு வழி எண்ணற்ற நூல்களை எழுதி இயங்கி வந்தவர்.

தமிழ்நேயம் என்ற இதழுக்கு முன்னும் சில ஏடுகளை நடத்தியவர். மார்க்சிய வழி ஆய்வுக்கு ஒரு நெறியாளர் போல் பலருக்கு வழி காட்டியவர். கவிதை, புதினம், சிறுகதைகள் ஆகியவற்றை இயங்கியல் பார்வையோடு அனுகியவர். தமிழறம், தமிழர் மெய்யியல் ஆகியவற்றில் அக்கறை செலுத்தியவர். மார்க்சியத்தைத் தமிழ்மண்ணுக்கு ஏற்பவும் மரபுக்கு ஏற்பவும் மாற்றியமைத்துச் சொன்னவர்.

இப்படிஒரு சிந்தனையாரைத் தமிழ்ப் புலமையை, உலகம் தமிழனுக்குக் கொடை செய்ததைத் தமிழ் உலகம் கண்டு கொள்ளவில்லையே... என்பதுதான் அவர் மரணம் தந்திருக்கும் துயரைவிட அதிகமானது எனக்கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT