/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SFSFS.jpg)
மார்க்ஸியத்தில் அறிஞராகவும், பெரும் எழுத்தாளராகவும் தன்னை நிலை நிறுத்தி கொண்டவர் கோவை ஞானி (வயது 86)கோவையின் துடியலூர் வெள்ளக் கிணறு பிரிவு, வி.ஆர்.வி நகரில்உள்ள தனது வீட்டில் இன்று மதியம் 12 மணிக்கும் மேல் மூச்சுதிணறலால் தவித்த நிலையில் அவர் காலமானார்.
மார்க்ஸிய அழகியல், கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை என பல நூல்களை எழுதிய கோவை ஞானி,நிகழ், தமிழ் நேயம் என்கிற சிற்றிதழ்களை சர்க்கரை நோயால் கண் பார்வை இழந்த பின்னும் நடத்தி வந்தார்.சில வருடங்களுக்கு முன்புதான் அவரது மனைவி இந்திராணி இயற்கை எய்தினார்.
கோவை ஞானியின் தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் விளக்கு விருது, கனடா தமிழிலக்கிய தோட்ட இயல் விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தமிழ்ப் பேராயம்வழங்கிய பரிதிமாற் கலைஞர் விருது என இவர் வாங்கிய விருதுகள் கணக்கிலடங்காதவை. இந்த ஜூலை 1-ல் தான் அவரது பிறந்த நாளன்று,சில இலக்கியவாதிகள் அவரை வாழ்த்தி விட்டு வந்தனர்.இதே ஜூலை 22 - ல்இப்போது அவரது இலக்கிய மூச்சு நின்று போய் விட்டதே என கண்ணீர் மல்க நிற்கிறார்கள் இலக்கிய வாதிகள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)