ADVERTISEMENT

‘கோட்டக் மகேந்திரா’ நிதி நிறுவனத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

02:10 PM Jun 29, 2018 | Anonymous (not verified)

கடலூர் விவசாயி தமிழரசன் தற்கொலைக்கு காரணமான கோட்டக் மகேந்திரா நிதிநிறுவனத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் கருணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராயன் மகன் தமிழரசன் (வயது 40) என்பவர் கோட்டக் மகேந்திரா வங்கியில் இரண்டாண்டுகளுக்கு முன் டிராக்டர் கடன் பெற்று நிலுவையில்லாமல் தவனை திரும்பசெலுத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு மாதமாக சர்க்கரை ஆலை கரும்பு பணம் வழங்க காலதாமதமானாதால் 1 மாத தவனை நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி நேற்று முன்தினம் கோட்டக் மகேந்திரா நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் டிராக்டரை ஜப்தி செய்து எடுத்து சென்று விட்டனர். மன்றாடி பார்த்தும் தர மறுத்ததால் விவசாயி தமிழரசன் அவமானம் தாங்காமல் விஷம் அறிந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.


தமிழக அரசு உடனே வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்வதோடு, தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக அடக்கு முறையை கையால்வதும், அவமானப்படுத்தும் விதமாக செயல்படுவதும், தவனை தொகையை முழுமையும் செலுத்தியவர்களிடம் வரம்பு மீறி வட்டி, அபராத வட்டி பல லட்சம் கேட்டு மிரட்டுவதும் , வாகனங்களின் உரிமங்களை வழங்க மறுப்பதும் தொடர்கிறது.

இதனால் பலவிவசாயிகள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளதை கருத்தில் கொண்டு கோட்டக் மகேந்திரா வங்கியை தடை செய்திட தமிழக அரசு முன் வரவேண்டும். தற்கொலை செய்து கொண்ட தமிழரசன் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் தமிழக அரசு நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் எடப்பாடி அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT