Skip to main content

கரோனா சிகிச்சை- ஒருநாளைக்கு ரூபாய் 23,182 வசூலிக்கலாம்!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

coronavirus treatment private hospital fee structure

கரோனாவுக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது இந்திய மருத்துவக் கவுன்சிலின் (Indian Medical Association) தமிழக பிரிவு (Tamilnadu state branch). அதன்படி, கரோனா பாதிப்பு குறைவாக இருந்தால் ஒரு நாளைக்குத் தனியார் மருத்துவமனைகளில் ரூபாய் 23,182 வசூலிக்கலாம். கரோனா பாதிப்பு குறைவாக இருந்தால் 10 நாளுக்கு மொத்தம் ரூபாய் 2,31,820 வசூலிக்கலாம். கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 25,377- ஐ கட்டணமாக வசூலிக்கலாம். 
 


கரோனா தீவிரமாக உள்ளவர்களுக்கு 17 நாட்களுக்குச் சேர்த்து கட்டணமாக ரூபாய் 4,31,411வசூலிக்கலாம் என பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செந்தில் பாலாஜிக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

MRI scan for Senthil Balaji

 

அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் இருந்த நிலையில், கடந்த 15/11/2023 அன்று உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் குடல் புண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. மூன்றாவது நாளாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ரத்த அழுத்தம் தொடர்ந்து குறையாமல் இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ரத்த அழுத்தம் மற்றும் குடல் புண்ணிற்கான மருத்துவ பரிசோதனைகள் இன்று நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூக்கமின்மை காரணத்தால் முறையாக உணவுகள் எடுத்துக் கொள்ளாததால் செந்தில் பாலாஜிக்கு இந்த பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பாக இரத்த பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில், இன்று எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Next Story

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக அரசு அதிரடி

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

ஐபிஎஸ் அதிகாரிகள் 33 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் எஸ்.பி.யாக இருந்த சிவகுமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்.பி.யாக இருந்த சுஜித்குமார் மதுரை தெற்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை தெற்கு மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த வருண் குமார், திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

சென்னை தியாகராய நகர் துணை ஆணையராக இருந்த அருண் கபிலன், சேலம் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடையாறு துணை ஆணையர் மகேந்திரன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், நாகை கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட மொத்தம் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.