ADVERTISEMENT

இளைஞர் மீது வழக்குப்பதிவு; மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த குடும்பத்தினர்

01:37 PM Jan 05, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாவட்டத்தில் காவல்துறையினர் இளைஞர் ஒருவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி மண்ணெண்ணெய் கேனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இளைஞரின் குடும்பத்தினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 36). இவருக்கு மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். செங்குந்தபுரம் பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்பு மருந்தகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி மகேந்திரன், அவரது நண்பர் சுரேஷ் இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கூறி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த அவர்கள் தினமும் தாந்தோணிமலை காவல்நிலையத்திற்குச் சென்று காலை, மாலை என இரு வேளையும் கையெழுத்திட்டு வருகின்றனர். 17-வது நாளாக கையெழுத்திடுவதற்காக தாந்தோணிமலை காவல்நிலையத்திற்கு இன்று காலை வழக்கம்போல் சென்றவரைப் பிடித்துவைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த அவர்களது குடும்பத்தினரும், நண்பர்களும் தாந்தோன்றிமலை காவல்நிலையம் முன்பு திரண்டனர். போதைக்கு பயன்படுத்தும் மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக மேலும் ஒரு வழக்கில் மகேந்திரனை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உரிய காரணம் ஏதும் கூறாமல் தனது கணவரை போலீசார் கைது செய்ததாகக் கூறி கைக்குழந்தையுடன் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முற்பட்ட நிலையில், மண்ணெண்ணெய் கேனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை தாந்தோணிமலை காவல்நிலைய போலீசார் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT