Fraud by women claiming to get government jobs using the minister's name!

Advertisment

அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம், காந்திபுரம் பகுதியில் வசிக்கும் சௌமியா என்பவர், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது உறவினர் எனக் கூறி, 10- க்கும் மேற்பட்ட நபர்களை நம்ப வைத்து பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

தலைமறைவாக இருந்த சௌமியாவின் இருப்பிடத்தையறிந்து, பாதிக்கப்பட்டவர்கள் அவரை கையும், களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோன்று திருமணம் செய்துகொள்வதாக பல ஆண்களை ஏமாற்றியதும் தெரிய வந்தது.

Advertisment

இது தொடர்பாக, பசுபதிபாளையம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.