/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3475.jpg)
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுக்காளியூர் பகுதியில் குமரேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் புதியதாகக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று சாரம் அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்பொழுது மோகன்ராஜ் (வயது 23) என்பவர் எதிர்பாராத விதமாக கீழே திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்துள்ளார். இவரின் சத்தம் கேட்டு அருகில் இருந்த சிவா (வயது 35) மற்றும் மற்றொருவரும் கழிவுநீர் கால்வாயில் விழுந்த அவரைக் காப்பாற்றுவதற்காக உள்ளே இறங்கியுள்ளனர். மூவரும் கழிவுநீர் தொட்டியில் மூச்சு விட முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் மூன்று பேர் உடலையும் கைப்பற்றி காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நேரில் ஆய்வு செய்துவிசாரணை மேற்கொள்ளஉத்தரவிட்டிருக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)