The police did not take action! A woman who cried front of police station

திண்டுக்கல் மாவட்டம், சென்னமநாயக்கன்பட்டி, அருணாச்சல நகரைச் சேர்ந்தவர் மகா (33 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் மோகன்ராஜ். கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இவர்களுக்கு 15 வயதில் இரட்டை குழந்தைகளாக மகன்கள், 10 வயதில் ஒரு மகன், 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். தாய் தந்தையை இழந்த நாகராணி, பாட்டி வளர்ப்பில் வளர்ந்துள்ளார். திருமணத்தின்போது வரதட்சணையாக 16 பவுன் தங்க நகையும், ஒரு லட்சம் ரொக்கமும் சீர்வரிசையாக வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் மோகன்ராஜ், கரூர் மாவட்டம், வேப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக, இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மகா, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அங்கிருந்து மகாவை கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisment

இந்த புகார் தொடர்பாக நேற்று காலை மகளிர் காவல் நிலையத்தை அணுகியுள்ளார். நீண்ட நேரமாகியும் போலீசார் தரப்பில் எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை என்று கூறி, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் தரையில் அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில்பரப்பப்பட்டுவருகிறது.